இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை திருமணம் செய்ய தயார்! பிரபல பாலிவுட் நடிகை அறிவிப்பு

150

 

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக பிரபல பாலிவுட் நடிகை பாயல் கோஷ் தெரிவித்துள்ளார்.

அசத்தும் முகமது ஷமி
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த தொடரில் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது ஷமி அசத்தியுள்ளார். மேலும் பல ஆண்டுகளாக இந்திய அணியின் தவிர்க்க முடியாத பந்துவீச்சாளராகவும் உருவெடுத்துள்ளார்.

திருமணம் செய்து கொள்ள தயார்
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக பிரபல பாலிவுட் நடிகை பாயல் கோஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில், முகமது ஷமி நீங்கள் ஆங்கிலத்தில் நன்றாக பேசினால் உங்களை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக பாலிவுட் நடிகை பாயல் கோஷ் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதனை அவர் வேடிக்கையாக சொன்னாரா? அல்லது வெளிப்படையாக தெரிவித்தாரா என்பது தெரியவில்லை.

பாலிவுட் நடிகை பாயல் கோஷ் அவர்களும், இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி அவர்களும் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE