திரையுலகில் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். 70களில் இருந்து நடிகராக தனது பயணத்தை துவங்கிய விஜயகுமார், ஹீரோ, குணசித்ர கதாபாத்திரம், வில்லன் என பல ரோல்களில் கலக்கியுள்ளார்.
விஜயகுமார் சினிமா துறையில் பிஸியான நடிகராக இருக்கும்போதே அவருடைய மகன் அருண் விஜய்யும் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். முதலில் தனது திரை பயணத்தை ஹீரோவாக ஆரம்பித்த அருண் விஜய் பின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் வில்லனாகவும் களமிறங்கினார்.
விஜயகுமாரின் மகன் அருண் விஜய்யை தொடர்ந்து தற்போது அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய்யும் நடிக்க வந்துவிட்டார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஓடிடியில் வெளிவந்த ஓ மை டாக் படத்தில் குழந்தை நட்சத்திர ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்பத்துடன் தீபாவளி
இந்நிலையில், மூன்று தலைமுறைகளாக திரையுலகத்தில் பயணித்து வரும் விஜயகுமாரின் குடும்பம் நேற்று தீபாவளியை அட்டகாசமாக கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அருண் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.