ஜப்பான் இரண்டு நாள் மொத்த வசூல் விவரம் இதோ

120

 

ஜப்பான் இரண்டு நாள் மொத்த வசூல் விவரம் இதோ

கார்த்தி 25வது திரைப்படம் ஜப்பான். கடந்த 10ஆம் தேதி வெளிவந்த இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜு முருகன் இயக்கியிருந்தார்.

Dream Warrier Pictures தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த ஜப்பான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

திரைக்கதையில் தொய்வு, கதாபாத்திரங்கள் வலுவாக இல்லை என பலரும் இப்படத்தின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

வசூல் விவரம்
இந்நிலையில், முதல் நாள் ரூ. 8 கோடி வரை வசூல் செய்த ஜப்பான் படம் இரண்டாவது நாள் உலகளவில் ரூ. 3 கோடி வசூல் செய்துள்ளது.இதன்மூலம் இரண்டு நாட்கள் முடிவு மொத்தமாக ரூ. 11 கோடி வரை உலகளவில் ஜப்பான் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE