சொந்த நாட்டில் மலர்தூவி வரவேற்பு..ஆனால் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய ஆப்கான் வீரர்கள்

107

 

உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு சொந்த நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வியத்தகு செயல்பாடு
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் வியத்தகு வகையில் சிறப்பாக செயல்பட்டது.

முதல் வெற்றியையே நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி பதிவு செய்ததால் ஆப்கான் சரித்திரம் படைத்தது.

அதன் பின்னர் நெதர்லாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் என ஆப்கான் ஹாட்ரிக் வெற்றி பெற்றதால் ரசிகர்கள் மிரண்டு போயினர்.

அரையிறுதிக்கு தகுதி பெற முடியாவிட்டாலும் கிரிக்கெட் ரசிகர்களின் அன்பையும், ஆதரவையும் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் வென்றனர்.

தீபாவளி வாழ்த்து
இந்த நிலையில் நாடு திரும்பிய ஆப்கான் வீரர்களுக்கு, காபூல் நகரில் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால், ஆப்கான் வீரர்களோ இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறி எக்ஸ் தளத்தில் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

ரஹ்மானுல்லா குர்பாஸ், ரஷீத் கான் தங்கள் பதிவுகளில், ‘அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வளமான தீபாவளி வாழ்த்துக்கள். பண்டிகைக் காலம் உங்கள் வீட்டிற்கு அன்பு, மகிழ்ச்சி மற்றும் ஒளியைக் கொண்டு வரும் என்று நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

SHARE