கோல்கீப்பரிடம் பந்தை கடத்திய வீரர்..குறுக்கே புகுந்து கோல் அடித்த ரொனால்டோ..ஆர்ப்பரிப்பில் அதிர்ந்த மைதானம்

111

 

சவுதி புரோ லீக் தொடரில் அல் நஸர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அல் வெஹ்டாவை வீழ்த்தியது.

அலெக்ஸ் டெல்லெஸ்
கிங் அப்துல் அஜிஸ் மைதானத்தில் நடந்த அல் நஸர் மற்றும் அல் வெஹ்டா அணிகள் மோதின. ஆட்டத்தின் 11வது நிமிடத்திலேயே அல் நஸர் அணி வீரர் அலெக்ஸ் டெல்லெஸ் கோல் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து அல் அம்ரி 39வது நிமிடத்தில் கோல் அடிக்க, 49வது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த கோலினால் மைதானமே அதிர்ந்தது.

அதாவது, அல் வெஹ்டா வீரர் ஒருவர் பந்தை சக வீரருக்கு கடத்தும்போது, குறுக்கே திடீரென புகுந்த அல் நஸரின் சமி அல் நஜெய் பந்தை தடுக்க முயற்சித்தார்.

ரொனால்டோ குறுக்கிட்டு கோல்
அவரது காலில் பட்டு உயரே பறந்த பந்தை எதிரணி வீரர் தலையால் முட்டி கோல் கீப்பருக்கு தள்ளினார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ரொனால்டோ குறுக்கிட்டு அலட்டிக் கொள்ளாமல் கோல் அடித்தார்.

அதன் பின்னர் அல் வெஹ்டா அணி வீரர் அன்செல்மோ 81வது கோல் அடித்தார். எனினும் அல் நஸர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இது அல் நஸர் அணிக்கு நடப்பு சவுதி புரோ லீக் சீசனில் 10வது வெற்றி ஆகும்.

SHARE