காதலனுடன் கமல் மகள் ஸ்ருதி ஹாசன் தீபாவளி கொண்டாட்டம்.. எப்போ கல்யாணம்

111

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு தமிழில் அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்த திரைப்படம் 7ஆம் அறிவு. கமல் ஹாசனின் மகளான இவர் தனது தந்தையை போலவே சினிமாவில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் கூட இசையில் ஸ்ருதி ஹாசனுக்கு ஆர்வம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட வித்தியாசமான ஆல்பம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அந்த ஆல்பம் பாடல் கூட ரசிகர்கள் மத்தியில் வைரலானது. அதே போல் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சலார் திரைப்படம் வெளிவரவுள்ளது.

நடிகை ஸ்ருதி ஹாசன் பிரபல விஷுவல் ஆர்ட்டிஸ்ட் Santanu Hazarika என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளிவரும்.

இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகைக்கு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது காதலன் Santanu Hazarika-வுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த இன்ஸ்டாகிராம் பதிவின் கமெண்டில் ரசிகர்கள் பலரும், உங்களுக்கு எப்போது கல்யாணம் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

SHARE