எனது மனைவியின் நீளமான முடியை கட் செய்ததே நான் தான், அவர் Boycutல் இருக்க காரணம்- கருணாஸ் சொன்ன தகவல்

117

 

தமிழ் சினிமாவில் 2001ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கருணாஸ்.

இந்த படத்தின் மூலமே பிரபலமான இவர் வில்லன், புதிய கீதை, திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.

நாயகனாகவும் சில படங்கள் நடித்த இவர் அரசியலிலும் பெரிய ஈடுபாடு காட்டி வருகிறார். இவர் பிரபல பின்னணி பாடகி கிரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும்மகன் இருக்கின்றனர்.

நடிகரின் பேட்டி
எனது மனைவி கிரேஸ் பாப் கட்டிங் லுக்கில் எப்போதும் இருப்பதற்கு காரணமே நான் தான். திருமணத்திற்கு முன்னர் அவளுக்கு நீளமான முடி இருந்தது, ஆனால் நான் தான் வெட்டிவிட்டு விட்டேன்.

Boycut பண்ணால் தான் பெண்களுக்கு ஒரு தைரியமும், தன்னம்பிக்கையும் வரும். அதனால் தான் நான் அவரது தல முடியை வெட்டி விட்டேன் என கூறியுள்ளார்.

SHARE