ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சை கருத்து; மன்னிப்பு கேட்ட முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

152

 

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தததை அடுத்து, அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களான உமர் குல் மற்றும் ஷாஹித் அப்ரிடியுடன் ஒரு விவாதத்தில் அப்துல் ரசாக் பங்கேற்றார். அப்போது கிரிக்கெட்டுக்கு தொடர்பில்லாத பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து ஆட்சேபகரமான கருத்துகளை தெரிவித்தார்.

‘நான் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டு, நல்லொழுக்கமுள்ள ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என நான் நினைத்தால்., அது நடக்குமா” என்று எல்லை மீறி பேசினார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐஸ்வர்யா ராயின் பெயரைச் சொன்னதும் அதிர்ச்சியடைந்த ஷாஹித் அப்ரிடி, பின்னர் சிரித்து கைதட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், அப்துல் ரசாக், உமர் குல் மற்றும் ஷாஹித் அப்ரிடி ஆகியோர் மீது இந்திய ரசிகர்களும் கலக்கமடைந்துள்ளனர். இதுதான் உங்கள் நாடு கற்றுக் கொடுத்த கலாச்சாரமா? ஒரு பெண்ணை இப்படி பேசுவது வெட்கக்கேடானது என நெட்டிசன்கள் குறை கூறி வருகின்றனர்.

மேலும், சக முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் அவர் மீது குற்றம் சாட்ட, இறுதியாக மன்னிப்பு கேட்டார். கிரிக்கெட் பயிற்சி மற்றும் அதன் நோக்கங்களைப் பற்றி பேசும்போது, ​​நான் தனிப்பட்ட முறையில் ஐஸ்வர்யா ராயின் பெயரைக் குறிப்பிட்டேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்று பாகிஸ்தானில் உள்ள உள்ளூர் ஊடகங்களிடம் மன்னிப்பு கேட்டார்.

அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர்.

இந்தியாவில் நடைபெற்றுவரும் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், லீக் கட்டத்தில் 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்த பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணுக்குத் திரும்பியது. இந்த உலகக் கோப்பையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விகளை பாகிஸ்தான் ரசிகர்களாலும், அந்த அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களாலும் ஜீரணிக்க முடியவில்லை. இந்த நிலையில், இதுபோன்ற தரக்குறைவான கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE