மிரட்டல் லுக்கில் பிரபலத்தின் புதிய பட லுக்- அட யார் இவர் தெரிகிறதா, இவரை இப்படி எதிர்ப்பார்க்கவில்லையே?

133

 

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக பல படங்களில் பணியாற்றி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சாண்டி.

சின்னத்திரையில் மானாட மயிலாட நடன நிகழ்ச்சியின் மூலம் பெரிய ரீச் பெற்ற சாண்டி அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தும் அங்கேயும் பல நிகழ்ச்சிகளுக்கு நடனம் அமைத்து சாதனை படைத்தார்.

இப்போது தொடர்ந்து நிறைய படங்களில் நடித்துவரும் சாண்டி நடிப்பில் கடைசியாக விஜய்யின் லியோ படம் வெளியாகி இருந்தது.

இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

புதிய படம்
இந்த நிலையில் நடிகர் சாண்டி கன்னட திரையுலகில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். கன்னட இயக்குனர் ஷுன்யா இயக்கும் புதிய படம் ரோசி. இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

மிரட்டலான போஸ்டரை கண்ட ரசிகர்கள் அட நம்ம சாண்டி மாஸ்டரா இது, அவரை இப்படியொரு அவதாரத்தில் எதிர்ப்பார்க்கவில்லையே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

SHARE