61 தரமற்ற மருந்துகள் – மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்

141

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 61 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து – மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 1,105 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் கிருமித் தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, வலி பாதிப்பு, காய்ச்சல், சளி, கால்சியம் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 61 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

SHARE