
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் இணையத்தளமான கிரிக்பஸ் இதனை தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கிரிக்பஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அகமதாபாத்தில் தற்போது நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் இக் கூட்டத்தில் இலங்கையின் கிரிக்கெட் தடை தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.