நடிகர் மாதவன் தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் பாப்புலர் ஆன நடிகர். அவர் நடித்து இயக்கிய ராக்கெட்ரி படம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி இருந்தது.
மாதவன் ஆரம்பகாலத்தில் சினிமாவில் சாக்லேட் பாய் லுக்கில் எல்லோரையும் கவர்ந்தவர். தற்போது 53 வயதாகும் மாதவனுக்கு இப்போதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
நடிகை ஜுஹி சாவ்லாவை தான் திருமணம் செய்வேன் என அம்மாவிடம் கூறினாராம். மாதவன் சினிமாவில் நடிக்க தொடங்கும் முன்பே இது நடந்ததாம்.
அந்த ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என மாதவன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
தற்போது மாதவன் மற்றும் ஜூஹி சாவ்லா இருவரும் The Railway Men என்ற வெப் சீரிஸில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதில் அவர்கள் இருவருக்கும் ஒன்றாக காட்சிகள் இல்லையாம். அதனால் இப்போதும் அவரை பார்க்க முடியாமல் போய்விட்டது என மாதவன் வருத்தமாக பேசி இருக்கிறார்.