விரைவில் குணமடைந்து வாருங்கள் மன்னரே! ரஷீத் கானுக்காக பதிவிட்ட ஆப்கான் வீரர்

102

 

ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் தனக்கு அறுவை சிகிச்சை நல்ல முறையில் முடிந்துவிட்டதாக எக்ஸில் பதிவிட்டுள்ளார்.

ரஷீத் கான்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருப்பவர் ரஷீத் கான். சுழற்பந்து வீச்சில் வல்லவரான ரஷீத், இக்கட்டான சூழலில் களமிறங்கி துடுப்பாட்டத்தில் மிரட்டக்கூடியவர்.

இந்த நிலையில் நட்சத்திர வீரரான ரஷீத் கானுக்கு இங்கிலாந்தில் Minor lower முதுகு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அவர் விரைவில் குணமடைவார் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆப்கான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில்,

‘ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் பரபரப்பு வீரருக்கு, இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜேம்ஸ் அலிபோனின் நிபுணத்துவத்துடன், ஒரு சிறிய முதுகு அறுவை சிகிச்சை (Minor lower back surgery) செய்யப்பட்டது. அவர் சிறிது காலம் ஓய்வில் இருக்கிறார், விரைவில் குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளது.

நன்றி
அதேபோல் ரஷீத் கான் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் மீண்டு வர வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், ”வாழ்த்துக்கள் கூறிய உங்கள் அனைவருக்கும் நன்றி. அறுவை சிகிச்சை நன்றாக முடிந்தது, இப்போது குணமடையும் நிலையில் உள்ளது. மீண்டும் களத்தில் இறங்கி விளையாட காத்திருக்க முடியவில்லை” என கூறியுள்ளார்.

முன்னதாக ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி தனது பதிவில் ரஷீத் கானின் புகைப்படத்தை வெளியிட்டு ”விரைவில் குணமடையுங்கள் மன்னரே” என குறிப்பிட்டார்.

SHARE