குழந்தை விஷயத்தில் சமந்தா எடுத்த முடிவு? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

100

 

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். அவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் நான்கே வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்.

அதன் பின் அவர் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். சினிமாவில் முழு கவனம் செலுத்த முடியாத நிலையில், சிகிச்சைக்காக தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார் அவர்.

குழந்தைகளை தத்தெடுக்கிறாரா?
சமந்தா பிரதியுஷா என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதன் மூலமாக பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்.

இந்நிலையில் அந்த நிறுவனம் மூலமாக சமந்தா இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க இருக்கிறார் என செய்தி வெளியாகி இருக்கிறது. அதனால் சமந்தா இரண்டாம் திருமணம் செய்ய வாய்ப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது.

SHARE