பார்க்கிங் படம் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ்.. முதல் விமர்சனம் இதோ

139

 

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த பல லோ பட்ஜெட் திரைப்படங்கள் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

அயோத்தி, போர் தொழில், டாடா, குட் நைட், சித்தா சமீபத்தில் வெளிவந்த ஜோ போன்ற படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

பார்க்கிங்
அந்த வகையில் அடுத்ததாக லோ பட்ஜட்டில் உருவாகி வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் பார்க்கிங். ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர், இந்துஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர்.

வருகிற டிசம்பர் 1ம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்த மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. வித்தியாசமான கதைக்களம் கண்டிப்பாக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் விமர்சனம்
இந்நிலையில், பார்க்கிங் படம் குறித்து பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘படம் நான் சில நாட்களுக்கு முன் பார்த்தேன். கண்டிப்பாக இது ப்ளாக் பஸ்டர். ஐயப்பனும் கோஷியும், டிரைவிங் லைசன்ஸ் போன்ற படங்கள் போல் பார்க்கிங் படமும் வித்தியாசமாக இருக்கிறது. எளிமையான கதைக்களம், கண்டிப்பாக மக்களுக்கு கனெக்ட் ஆகும். நான் எம்.எஸ். பாஸ்கர் சாருடன் ஒர்க் பண்ண வேண்டும் என நினைக்கிறன்’ என கூறியுள்ளார்.

SHARE