ஐபிஎல்லில் இலங்கை வீரர் பானுக ராஜபக்சவை விடுவித்த பஞ்சாப் கிங்ஸ்!

109

 

பஞ்சாப் கிங்ஸ் அணி 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இலங்கையின் பானுக ராஜபக்ச உட்பட 5 பேரை விடுவித்துள்ளது.

துபாயில் ஏலம்
2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களை தக்கவைப்பது, விடுவிப்பது ஆகிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

துபாயில் 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் ஏலம் 19ஆம் திகதி தொடங்குகிறது. கடந்த ஆண்டியின் ஒரு அணியின் பட்ஜெட் ரூ.95 கோடியாக இருந்த நிலையில், தற்போது ஒரு அணியின் பட்ஜெட் ரூ.100 கோடியாக உயர்ந்துள்ளது.

இது ஒவ்வொரு வீரருக்கும் மூன்று வருட ஒப்பந்தத்தின் மூன்றாவது மற்றும் இறுதி ஆண்டாகும், அடுத்த ஆண்டு ஒரு மெகா ஏலம் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி தக்க வைத்த மற்றும் விடுவித்த வீரர்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பானுக ராஜபக்ச
இதில் இலங்கை துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ச (Bhanuka Rajapaksa) விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் மோஹித் ரதீ, ராஜ் பவா, ஷாருக் கான், பால்தேஜ் சிங் ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனைய வீரர்கள் அனைவரும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

2022ஆம் ஆண்டில் பஞ்சாப் அணிக்காக 50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பானுக ராஜபக்ச 9 போட்டிகளில் 206 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால் கடந்த சீசனில் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடி அவர் 71 ஓட்டங்கள் எடுத்தார். இதில் ஒரு அரைசதம் அடங்கும்.

SHARE