தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிக்கமாட்டேன்! பிரபல நபரின் அதிரடி அறிவிப்பு

130

 

எதிர்வரும் 2024 ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிப்பதை தன்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்று உலக பணக்காரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் அமெரிக்காவில் வசித்துவருகிறார். சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் கருத்துகள் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்து வருவது வழக்கம்.

அந்தவகையில் `நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

குறித்த பேட்டியில், வெள்ளை மாளிகையில் நடைபெறும் மின்சார வாகனங்களுக்கான உச்சி மாநாட்டில் டெஸ்லா நிறுவனத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதன் மூலம் தான் அவமதிக்கப்பட்டதால் அமெரிக்காவில் எதிரவரும் 2024 ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் ஜோ பைடனுக்கு வாக்களிக்க போவதில்லை என எலான் மஸ்க் பகிரங்கமாக அறிவித்தார்.

இதையடுத்து, டிரம்பிற்கு வாக்களிப்பீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இது டிரம்புக்கான ஆதரவை குறிக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE