உகண்டாவில் 70 வயதுப் பெண் ஒருவர் இரட்டை குழந்தையை பெற்றுள்ளார்.
தலைநகர் காம்பாலாவில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் அறுவைச் சிகிச்சை மூலம் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையை ஈன்றுள்ளார்.
செயற்கை முறையில் கருத்தரித்தே சபினா நமுக்வாயா என்ற அந்த முதிய பெண் குழந்தை பெற்றுள்ளார்.
தாயும் பிள்ளைகளும் நலமாக இருப்பதாகவும் அவர்கள் சிகிச்சை மையத்தில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
“70 வயதில் தம்மால் கர்ப்பமாகவோ குழந்தையைப் பார்த்துக்கொள்ளவோ முடியாது என்பார்கள்.
இப்போது எனக்கு இரட்டைப் பிள்ளைகள் உள்ளனர்” என்றார் நமுக்வாயா.2020ஆம் ஆண்டு நமுக்வாயா பெண் குழந்தையைப் பெற்றார். எனினும் அதற்கு முன் அவருக்கு குழந்தைகள் இல்லை.