அமெரிக்காவிலுள்ள நெடாவா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபரும் அமெரிக்க பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூடு காரணமாக அமெரிக்காவின் நெவாடா பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்திப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.