இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன், ஐபிஎல் ஏலத்தில் எப்படி பங்கு பெறுவது என்று கேட்டுள்ளார்.
மணிப்பால் டைகர்ஸ் வெற்றி
இந்தியாவில் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலும் ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
நேற்று நடந்த போட்டியில், மணிப்பால் டைகர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது.
முதலில் துடுப்பாடிய இந்தியா கேபிடல்ஸ் 177 ஓட்டங்கள் குவித்தது. சிக்ஸர் மழை (5) பொழிந்த இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் (Kevin Pietersen) 27 பந்துகளில் 56 ஓட்டங்கள் விளாசினார்.
கெவின் பீட்டர்சன் பதிவு
பின்னர் ஆடிய மணிப்பால் டைகர்ஸ் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டு 181 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தனது ஆட்டம் குறித்த வீடியோவை கெவின் பீட்டர்சன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார். அத்துடன் நேற்று இரவு என தனது ஆட்டத்தினை குறிப்பிட்ட அவர், ஐபிஎல் ஏலத்தில் எப்படி நான் நுழைவது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் பதில் அளித்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.