யாழ். மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் கபிலத் தத்தி, வெண்முதுகு தத்தி ஆகிய பூச்சிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது யாழ். மாவட்ட செயலக விவசாயப் பிரிவினரால் இன்றைய தினம் (12.12.2023) யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டுள்ளது.
கலந்துரையாடல்
இதன்போது யாழ். மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் கபிலத் தத்தி, வெண்முதுகு தத்தி ஆகிய பூச்சிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன், மாகாண விவசாய பணிப்பாளர் சுகந்தினி செந்தில்குமரன், யாழ். மாவட்ட விவசாயப் பணிப்பாளர் சசிப்பிரபா கைலேஸ்வரன், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.