தேர்தல் விஞ்ஞாபனத்தை நிறைவேற்றிய கே.கே. மஸ்தான்

321

தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டதைப் போன்று, தமது ஐந்து வருட சம்பளப்பணத்தையும் வறிய மாணவர்களின் கல்விக்காக செலவிடுவேன் என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய காதர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வெற்றியையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

‘எனது வெற்றிக்காக பணியாற்றிய போராளிகள் மற்றும் இளைஞர்களுக்கும் மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன் எனது பதவிக்காலத்தில் எவ்வித மத, இன பேதமும் இன்றி அனைத்து மக்களுக்கும் பணியாற்றுவதற்காக, எனது முழு நேரத்தையும் செலவிடுவேன்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சேர்ந்து எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவும் கல்வி, மீள்குடியேற்றம், மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கான தீர்வை பெற என்னாலான அனைத்து முயற்சியையும் மேற்கொள்வேன்’ என தெரிவித்தார்.

SHARE