இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மிரட்டிய ரிங்கு சிங்
தென்னாப்பிரிக்காவின் இன்று Gqeberha மைதானத்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆரம்பத்திலேயே ஓட்டங்கள் எதுவும் குவிக்காமல் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
அணியை மீட்க போராடிய திலக் வர்மா தன்னுடைய பங்கிற்கு 29 ஓட்டங்கள் குவித்து அவுட்டானார். ஆனால் பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் சூர்யகுமார் மற்றும் ரிங்கு சிங் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பொறுப்புடன் விளையாடிய கேப்டன் சூர்யகுமார் 36 பந்துகளில் 56 ஓட்டங்கள் குவித்து அவுட்டானார். ஆனால் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடி வந்த ரிங்கு சிங் 39 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் விளாசி 68 ஓட்டங்கள் குவித்தார்.
இதற்கிடையில் மழை குறுக்கிட்டதால் 19..3 ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் பேட்டிங் இன்னிங்ஸ் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 19.3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்கள் குவித்து இருந்து குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்கா வெற்றி
மழை குறுக்கீடு காரணமாக ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கபட்டு 152 இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்த ரீசா ஹென்ட்ரிக்ஸ் 49 ஓட்டங்கள் குவித்து குல்தீப் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐடன் மார்க்ராம் தன் பங்கிற்கு 17 பந்துகளில் 30 ஓட்டங்கள் குவித்தார்.
இறுதியில் 13.5 ஓவர்கள் முடிவிலேயே தென்னாப்பிரிக்க அணி 154 ஓட்டங்கள் குவித்ததுடன், இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.