ரீ ரிலீஸில் ரஜினியை ஓவர் டேக் செய்த கமல்!! ஆளவந்தான் படத்தின் வசூல் விவரம் இதோ..

102

 

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2001 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஆளவந்தான்.

இப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தாலும் வசூல் ரீதியாக தோல்வியை தான் சந்தித்து. இருப்பினும் இப்படம் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக இருக்கின்றது.

ரஜினி Vs கமல்
கடந்த 18 ஆண்டுகளாக ரஜினி மற்றும் கமலின் படங்கள் ஒரே சமயத்தில் வெளியானதில்லை. கடைசியாக 2005 ம் ஆண்டு ரஜினியின் சந்திரமுகி திரைப்படமும் கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படமும் ஒரே தினத்தில் வெளியாகின.

அதன் பின்னர் தற்போது தான் ரஜினியின் முத்து திரைப்படமும், கமலின் ஆளவந்தான் ஒரே தினத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

இவ்விரு படங்களில் ஆளவந்தான் திரைப்படம் இதுவரை ரூ.50 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ரஜினியின் முத்து திரைப்படம் ரூபாய் 23 லட்சம் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

SHARE