ஜிகர்தண்டா டபுள் X பற்றி ஹாலிவுட் பிரபலம் Clint Eastwood போட்ட பதிவு- வைரலாகும் டுவிட்

127

 

தமிழ் சினிமாவில் 2014ம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தின் மையக் கருவை மட்டும் வைத்துக்கொண்டு வேறு ஒரு கதையுடன் டபுள் எக்ஸ் திரைப்படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

சினிமாவில் நடிக்க ஆசை இருக்கும் ஒரு ரவுடியை சினிமாவில் நடிக்க வைத்து அவரை சமூக அக்கறை உள்ள ஒரு மனிதனாக மாற்ற இயக்குனர் என்னவெல்லாம் செய்கிறார் என்பது தான் இந்தப்படத்தின் கதை. v

நவம்பர் 10ம் தேதி வெளியான இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

பிரபலத்தின் டுவிட்
இந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை ரசித்த விஜய் என்ற ரசிகர் ஹாலிவும் பிரபலம் Clint என்பவரை டாக் செய்து, நாங்கள் இந்தியர்கள், தமிழில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படம் வெளியாகியுள்ளது, Netflixல் உள்ளது.

இந்த படம் உங்களுக்கான Tribute, நீங்கள் இளம் வயதில் இருக்கும் அனிமேஷன் காட்சிகள் உள்ளது, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பாருங்கள் என பதிவு செய்துள்ளார்.

அதற்கு அவரது பக்கத்தில், Clint இந்த படத்தை தனது புதிய படம் Juror 2 பட வேலைகள் முடிந்ததும் பார்ப்பார், நன்றி என பதிவு செய்ய ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

SHARE