சுமார் ரூ. 189 கோடி சம்பளம்: 2023ல் அதிக சம்பளம் வாங்கிய வீராங்கனை யார் தெரியுமா?

109

 

2023ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையை அமெரிக்காவின் இளம் வீராங்கனை கோகோ காஃப் பெற்றுள்ளார்.

2023ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய வீராங்கனை
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஒவ்வொரு துறைகளை சேர்ந்த சிறந்த மற்றும் முதன்மையான இடத்தில் உள்ள நபர்களின் விவரங்கள் வெளியாவது வழக்கம்.

அந்த வகையில், 2023ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய பெண் விளையாட்டு வீராங்கனையாக அமெரிக்காவை சேர்ந்த 19 வயது இளம் டென்னிஸ் வீராங்கனை கோகோ காஃப்(Coco Gauff) உருவெடுத்துள்ளார்.

ஸ்போர்டிகோ வெளியிட்டுள்ள இந்த தகவலின் அடிப்படையில் 19 வயது இளம் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் கோகோ காஃப்(Coco Gauff), 2023 ம் ஆண்டில் சுமார் ஒப்பந்தம் மற்றும் பரிசு தொகையாக சுமார் 22.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஊதியமாக பெற்றுள்ளார்.

இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 189 கோடி ரூபாய் ஆகும்.

இதற்கு முன்னதாக அதிக சம்பளம் வாங்கிய வீராங்கனைகளாக செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா அல்லது நவோமி ஒசாகா இருந்துள்ளனர்.

கோகோ காஃப் அமெரிக்காவில் வைத்து நடைபெற்ற U.S. Open போட்டியில் கடந்த செப்டம்பர் மாதம் அவரது முதல் கிராண்ட்ஸ் லாம் சாம்பியன் பட்டத்தை பெற்றார்.

1999ம் ஆண்டு தன்னுடைய 17 வயதில் செரீனா வில்லியம்ஸ் U.S. Open-ல் வெற்றி பெற்ற பிறகு, U.S. Open போட்டியை இளம் வயதில் வென்ற வீராங்கனை என்ற பெருமையை கோகோ காஃப் பெற்றுள்ளார்.

SHARE