மருமகன் தாக்கியதில் மாமனார் உயிரிழப்பு!

112

 

மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி – நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 50 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி குறித்த நபர் தனிமையில் தனது வீட்டில் இருந்துள்ளதாகவும், இதன்போது மதுபோதையில் அங்கு வந்த மருமகன் (அக்காவின் மகன்)அவரைத் தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் படுகாயமடைந்த குறித்த நபர் யாழ் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

இதேவேளை தாக்குதலை மேற்கொண்டவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மந்திகை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE