ஜனவரி மாதம் முதல் எரிவாயுவின் விலையை கணிசமாக உயர்த்த வேண்டிய தேவை உள்ளது என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
தயக்கத்துடன் எடுக்கப்பட்ட தீர்மானம்
இது குறித்து லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிடுகையில்,
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ள நிலையில், எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.
அதேசமயம், வரி அதிகரிப்பின் காரணமாக இந்த தீர்மானத்தை தயக்கத்துடன் எடுக்க நேரிட்டது என தெரிவித்துள்ளார்.