கொட்டகலையிலிருந்து ஹட்டன் நோக்கி பெண்ணொருவர் செலுத்திச் சென்ற முச்சக்கரவண்டி ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் குடாகம பகுதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து இடம்பெற்ற போது சாரதியும் அவரது இரண்டு பிள்ளைகளும் முச்சக்கரவண்டியில் பயணித்ததாகவும், விபத்தில் மூவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.