சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கெளரவம்!

123
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டதையடுத்து, அவருக்கான பிரியாவிடை நிகழ்வு (15) சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், அமைச்சின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர், அவரின் சேவைகளை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரியான இவர், கிழக்கு மாகாண பல்வேறு திணைக்களங்களில் பல பதவிகளை வகித்து, பின்னர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்த நிலையில் இவருக்கான நியமனக் கடிதத்தை பிரதமர் தினேஷ் குணவர்த்தனவினால் கடந்த 14 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.
மட்டு. மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய (திருமதி) கலாமதி பத்மராஜா ஓய்வுநிலைக்கு சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே, இவர் நியமிக்கப்பட்டார்.
புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் தனது கடமைகளை இன்று திங்கட்கிழமை (18) காலை 8.30 மணியளவில் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
SHARE