வருமான அனுமதிப்பத்திரத்தை கொண்டிராத வாகனங்கள் தொடர்பானமுக்கிய அறிவுறுத்தல்!

110

 

05 வருடங்களுக்கு அதிக காலம் வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளாத வாகனங்கள் தொடர்பில் அனைத்து மாகாண சபைகளிடமிருந்தும் தகவல்களை கோரியுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு வாகன உரிமையாளர்களுக்கு அது தொடர்பில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பதிவு செய்யப்பட்டு பல வருடங்களாக பயன்படுத்தப்படாத சுமார் 23 இலட்சம் வாகனங்களை தடை செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வருவாய் உரிமம் புதுப்பிக்கப்படாத அல்லது மாற்றப்படாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE