யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது

112

 

பொலிஸாரின் விசேட நடவடிக்கையின் போது மூன்று பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் இன்று (17.12.2023) காலை முதல் விசேட பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி யாழ்ப்பாண பொலிஸ் பிராந்திய பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி பால்பண்ணை பகுதியிலேயே 20, 21,23 வயதுடைய மூவர் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்
மேலும், சந்தேக நபர்களிடம் ஹெரோயின் மற்றும் மாவா என்பன கைப்பற்றப்பட்ட நிலையில் மூவரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

SHARE