ஜப்பானின் அதன் அண்டை நாடுகளான சீனா, வடகொரியா போன்றவற்றிடம் இருந்து அவ்வப்போது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையை எதிர்கொள்ள நாட்டின் இராணுவ பலத்தை அதிகரிக்க ஜப்பான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவிடம் இருந்து இராணுவ உதவியை ஜப்பான் அரசாங்கம் கோரியது. எனவே ஜப்பானுக்கு ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
அதன்படி சுமார் ரூ.489 கோடி மதிப்பிலான சைட் விண்டர் ஏவுகணை உள்பட பல்வேறு நவீன ஆயுதங்களை வழங்க அமெரிக்க பாதுகாப்பு துறை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.