காசாவில் இஸ்ரேலிய படையினர் சினைப்பர் தாக்குதல் கிறிஸ்தவ தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த இரண்டு பெண்கள் பலி

108

 

காசாவில் சனிக்கிழமை இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட சினைப்பர் தாக்குதலில் கிறிஸ்தவ தேவாலயமொன்றில் தஞ்சமடைந்திருந்த தாயும் மகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்குகரை காசா இஸ்ரேல் ஜோர்தானில் கிறிஸ்தவ தேவலாயங்களை மேற்பார்வை செய்யும் Latin Patriarchate of Jerusalem, என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

யுத்தம் ஆரம்பித்த பின்னர் காசாவில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவர்கள்இந்த தேவாலயத்திற்குள் தஞ்சமடைந்துள்ளனர் என Latin Patriarchate of Jerusalem, தெரிவித்துள்ளது.

தேவாலயத்தின் கன்னியாஸ்திரிகள் பிரிவில் நடமாடிக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் சினைப்பர் தாக்குதலிற்குள்ளாகினர் காயமடைந்த ஒருவரை தூக்கி செல்லப்பட்டவர் கொல்லப்பட்டார் என Latin Patriarchate of Jerusalem தெரிவித்துள்ளது.

மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். எந்த முன்னெச்சரிக்கையும் முன்னறிவித்தலும் இன்றி இந்த தாக்குதல் இடம்பெற்றது எந்த அத்துமீறல்களும் இடம்பெறாத தேவாலயவளாகத்திற்குள் அவர்கள் சுடப்பட்டனர் எனவும் Latin Patriarchate of Jerusalemதெரிவித்துள்ளது.

காசாவில் இஸ்ரேலிய படையினர் சினைப்பர் தாக்குதல் கிறிஸ்தவ தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த இரண்டு பெண்கள் பலி | Israeli Gaza Kil Women Sheltering Christian Church

54 மாற்றுத்திறனாளிகள் தங்கியிருந்த அன்னை தெரேசாவின் சகோதரிகள் என்ற கன்னியாஸ்திரிகள் மடமும் இஸ்ரேல் இராணுவத்தின் டாங்கிகளின் தாக்குதலிற்குள்ளாகியுள்ளது.

இதன் போது அந்த கட்டிடத்திற்கு மின்சாரத்தை வழங்குவதற்கான ஒரேயொரு வழிமுறையாக காணப்பட்ட மின்பிறப்பாக்கி சேதமடைந்துள்ளது எனவும் Latin Patriarchate of Jerusalemதெரிவித்துள்ளது.

SHARE