சிரேஷ்ட ஊடகர் காதரின் மறைவு ஆழ்ந்த கவலையளிக்கிறது; முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸின் அனுதாபச் செய்தி
அபு அலா

சகோதரர் காதர் அவர்கள் மரணித்த செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைந்தேன் என்று கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உச்சபீட உறுப்பினரும், மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளருமாகிய கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்த அனுதாபச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இன்னானில்லாஹி வஇன்ன இலைஹி ராஜுஊன்.
மருதமுனை ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களில் முதன்மையானவராகவும் அமைதியான சுபாபமும், உண்மையான செய்திகளை வெளிக்கொனர்வதில் அவருக்கு நிகர் அவரேயாகும்.
மருதமுனையின் எந்த நிகழ்வாக இருந்தாலும் அவருடைய புகைப்படக் கருவி நுழையாத வைபவங்களே இல்லை என்று குறிப்பிடலாம். அதுமட்டுமல்ல நான் முதல்வராக இருந்த காலத்தில் என்னோடு நெருங்கி பழகிய ஒரு பண்பான ஊடகவியலாளராவார்.
நீண்டகாலம் நோய்வாய்பட்டிருந்து மரணித்த அன்னாரின் மண்ணறை வாழ்க்கையை இறைவன் விசாலமாக்கி மறு உலக வாழ்வையும் சிறப்பாக்கி வைப்பதுடன் உயர்தரமான ஜென்னத்துல் பிர்தௌவ்ஸ் எனும் சுவன வாழ்வையும் வழங்க வண்டுமென இறைவனைப் பிராத்திப்பதோடு இவரது பிரிவினால் துயருற்றிறுக்கும் அன்னாரது குடும்பத்தாருக்கு மன அமைதியையும் ஆறுதலையும் வழங்கவேண்டுமென இறைவனை வேண்டுகின்றேன் என்று கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மேலும் தெரிவித்துள்ளார்.