அமெரிக்காவில் அடுத்த வருடம் நவம்பர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபரான ஜோ பைடன், ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளார். அதோடு அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.
டிரம்பிற்கு தடை விதித்த நீதிமன்றம்
இந்நிலையில், நாடாளுமன்ற முற்றுகை தொடர்பான வழக்கை விசாரித்த கொலராடோ நீதிமன்றம், அதிபர் பதவிக்கு போட்டியிட டிரம்ப் தகுதியற்றவர் என தீர்ப்பு வழங்கியதுடன், கொலராடோவில் குடியரசு கட்சியின் முதல்நிலை வாக்குப்பதிவுக்கான வாக்குச்சீட்டில் டிரம்பின் பெயர் இருக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் , குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் உள்ள . இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி, , “இந்த தீர்ப்பை சட்டவிரோதமான நடவடிக்கையாக பார்க்கிறேன். இது அமெரிக்காவில் மோசமான விளைவை ஏற்படுத்தும். டிரம்ப் பெயர் வாக்குச்சீட்டில் இடம்பெறாமல் இருந்தால் நானும் போட்டியிலிருந்து விலகுவேன்.
இதே போன்று குடியரசு கட்சியின் பிற வேட்பாளர்களும் விலக வேண்டும் எனவிவேக் ராமசாமி குறிப்பிட்டுள்ளார். அதேவேளை டிரம்பிற்கு எதிரான இந்தத்தீர்ப்பு, கொலராடோவில் மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுக் கட்சியின் முதல்நிலை தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்.
ஆனால் அதன் முடிவு நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலின்போது, அந்த மாநிலத்தில் டிரம்புக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து போராட்டத்திற்கு தூண்டுதலாக டிரம்ப் செயல்பட்டதாக அவர் மீது கொலராடோ மாநில நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியபோது, அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு டிரம்பிற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.