திருடனுக்கு விரித்த வலையில் சிக்கி உயிரிழந்த நபர்

116

 

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செபஸ்டியன் மாவத்தையிலுள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மின் கம்பிகள்
இந்த மரணம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் உயிரிழந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வீட்டை திருடர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் வீட்டின் ஜன்னல்களில் மெல்லிய மின் கம்பிகள் இணைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

பொலிஸார் விசாரணை
குறித்த மின் கம்பிகளால் தாக்கப்பட்டே மரணம் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE