பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் இணைந்து நடித்து இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் சலார்.
இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், ஸ்ரியா ரெட்டி, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் இன்று உலகளவில் வெளிவந்துள்ள இப்படத்தின் ரசிகர்களின் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது.
விமர்சனம்
அதன்படி, ஸ்பெஷல் ஷோ பார்த்த ரசிகர்கள் பலரும் கூறிய விமர்சனத்தில், ‘ப்ளாக் பஸ்டர் திரைப்படம். பிரபாஸ் நடிப்பு வேற லெவல். அதே போல் பிரித்விராஜ் நடிப்பும் பட்டையை கிளப்புகிறது.
இயக்குனர் பிரஷாந்த் நீலின் இயக்கம் சூப்பர். தி பெஸ்ட், பிரபாஸின் மாஸ் கம் பேக். சண்டை காட்சிகள் அனைத்துமே வெறித்தனமாக இருக்கிறது. இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறோம்’ என எக்ஸ் தளத்தில் தங்களுடைய விமர்சனத்தை தெரிவித்துள்ளனர்.
ஒரு பக்கம் இப்படத்திற்கு நல்ல விமர்சங்கள் கிடைத்து வந்த நிலையில் பற்றொரு புறம் இப்படம் நன்றாக இல்லை, என கூறியும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளது. இதில் ‘சலார் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. எமோஷனல் கனெக்ட் இல்லை. இடைவேளை காட்சி நன்றாக இருக்கிறது. ஆனால், படம் நன்றாக இல்லை’ என கூறியுள்ளனர்.