மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கடமையை பொறுப்பேற்றார்!

102

 

மாவட்ட அரசாங்க அதிபர் நியமனத்தில் நீண்ட மாதங்களாக தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன் மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக கடந்த 21 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பொது நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோகவிடமிருந்து நியமன கடிதத்தை பெற்றுக் கொண்டார்.இந்த நிலையில் அரசாங்க அதிபர் இன்று (23) தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இன்றைய தினம் காலை ஆல யங்களுக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.

தொடர்ந்து புதிய அரச அதிபரை வரவேற்கும் நிகழ்வு மாவட்ட செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வின் மாவட்டத்தின் முன்னால் அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமேல் ,மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் உட்பட திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள், மதத்தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

SHARE