வேகந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 32 சந்தேக நபர்கள் கைது

97

கொம்பனித்தெரு, வேகந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 32 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொம்பனித்தெரு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடத்தியசோதனையின் போது இந்த குழு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது போதைப்பொருள் வைத்திருந்த 18 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதோடு, சந்தேகத்தின் பேரில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 2 கிராம் ஹெரோயின் மற்றும் 5 கிராம் ஐஸ்போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

SHARE