ஒரு மாத சம்பள பணத்தை வழங்கிய அமைச்சர்கள்

123

இந்தியாவின் தமிழ்நாட்டில் இம்மாத தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் நெருங்கிய போது கொட்டிய கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், புயல் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தினை வழங்குவதாகவும், திமுக எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் நிதியுதவி அளித்திடுமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்

அதன்படி, மழை வெள்ள பாதிப்புகளுக்கு அரசுக்கு உதவும் வகையில் அமைச்சர்களின் ஒரு மாத சம்பளமான 35 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மற்றும் திமுக எம்எல்ஏ-களின் ஒரு மாத சம்பளம் 91 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாயையும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்க முடிவெடுக்கப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில், சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி மற்றும் அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன் ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து 1 கோடியே 27 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர்.

SHARE