களுத்துறை கட்டுகுருந்த கடற்கரையில் நீரில் மூழ்கி பலியான பொலிஸ் கான்ஸ்டபிள்

111

 

கட்டுகுருந்த கடற்கரையில் தனது நண்பர்களுடன் நீராடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

களுத்துறை நாகொட பிரதேசத்தில் வசித்து வந்த தெஷாஞ்சன தரிந்த(22 வயது) என்ற கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கான்ஸ்டபிள் தண்ணீரில் மூழ்கியபோது, ​​அவருடன் இருந்த மற்ற நண்பர்கள் உதவி கேட்டு சத்தமிட்ட போது சம்பவ இடத்திற்கு வந்த மக்கள் கான்ஸ்டபிளை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலதிக விசாரணை
இருந்த போதிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்திருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE