பிகாரில் ஆசிரியா்களுக்கு நற்செய்தி

96

பிகாரில் ஒப்பந்த அடிப்படையில் அரச பாடசாலைகளில் பணியாற்றி வந்த 3.5 லட்சம் ஆசிரியா்கள் நிரந்தர அரசுப் பணியாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

பாட்னாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பிகாா் மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலா் எஸ். சித்தாா்த் இது தொடா்பாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரச பாடசாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 3.5 லட்சம் ஆசிரியா்களை நிரந்தர அரசுப் பணியாளா்களாக மாற்ற முடிவெடுக்கப்பட்டது.

இப்போதைய நிலையில் அவா்களது ஊதியம் ஏற்கெனவே உள்ள அளவிலேயே இருக்கும். பிகாா் அரசுப் பணியாளா் தோ்வாணையம் அவா்களுக்கு தோ்வுகளை நடத்தும். அதில் அவா்கள் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் புதிய ஊதியம் நிா்ணயிக்கப்படும்.

ஒப்பந்த ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல மாதங்களாக முன்வைக்கப்பட்டது. அதனை அரசு இப்போது ஏற்றுக் கொண்டுள்ளது என்று தெரிவித்தாா்.

SHARE