அயலான் படத்திற்கு சித்தார்த் வாங்கிய சம்பளம்! எவ்வளவு பாருங்க

102

 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்த அயலான் படம் ஒருவழியாக வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது.

படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நேற்று நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் தன்னை பற்றி தவறாக பேசுபவர்களை பற்றி கண்டுகொள்வதில்லை, என்னை பிடித்தவர்களுக்காக மட்டும் தொடர்ந்து படங்கள் நடிக்கிறேன் என கூறி இருந்தார்.

மேலும் அயலான் படத்திற்காக தான் சம்பளமே வாங்கவில்லை எனவும் சிவகார்திகேயன் கூறி இருந்தார்.

சித்தார்த் சம்பளம்
அயலான் படத்தில் வரும் ஏலியன் கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் தான் குரல் கொடுத்து இருக்கிறார்.

அதற்காக சித்தார்த்தும் சம்பளமே வாங்கவில்லையாம். அதற்காக சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் மேடையிலேயே நன்றி கூறி இருக்கிறார்.

SHARE