கனடாவின் இந்தப் பகுதியில் பனி மூட்டம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

110

 

கனடாவின் லண்டன் பகுதியில் கடுமையான பனி மூட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சில இடங்களில் படிப்படியாக பனிமூட்டம் குறைந்த போதிலும் சில பகுதிகளில் தொடர்ந்தும் கடுமையான பனிமூட்டம் நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.வாகன சாரதிகள் அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லண்டனின் சில பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மாலை வேளையில் வெப்பநிலை 3 பாகை செல்சியஸாக குறைவடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

SHARE