இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை நொறுக்கிய விராட் கோலி!

183

 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய அணி வீரர் விராட் கோலி 7 முறை ஒரே ஆண்டில் 2000 ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

செஞ்சூரியனில் நடந்த டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

விராட் கோலி இரண்டாம் இன்னிங்சில் 76 (82) ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் அவர் ஒரே ஆண்டில் 7 முறை 2,000 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார்.

இதற்கு முன்பு இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரா 6 முறை ஒரே ஆண்டில் 2,000 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

அவரது இந்த இமாலய சாதனையை கோலி முறியடித்துள்ளார். மேலும், கோலி அடித்த 30வது டெஸ்ட் அரைசதம் ஆகும்.

 

SHARE