கனடாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்

141

 

கனடாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஒட்டாவாவில் அமைந்துள்ள ரியாடு ஆற்றில் இந்த இருவரும் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

ஒரு சிறுவனின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டதுடன: ஏனைய சிறுவனின் சடலம் இன்று மீட்கப்பட்டது.பதின்ம வயதுடைய சிலர் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்தினை எதிர்நோக்கியுள்ளனர்.

சில சிறுவர்கள் குறித்த பனி நீரில் வீழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. 16 மற்றும் 18 வயதான இரண்டு சிறுவர்கள் சம்பவத்தில் உயிரழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் சிக்கிய 15 வயதான சிறுமியும் 18 வயதான சிறுவனும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய சிறுவன் நீரில் மூழ்கிய தனது சகோதரியை பாதுகாப்பாக மீட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE