இதோ பாருங்க, நான் சாக கூடாது, விஜயகாந்த் சொன்ன விஷயம்- இதுவரை வெளிவராத தகவல்

177

 

ஒருத்தன் இறந்த பிறகு மனைவி அழுதா நல்ல கணவன், குழந்தைகள் அழுதா நல்ல தகப்பன், ஊரே அழுதா நல்ல தலைவன், உனக்காக நாடே அழுவுதுய்யா என்ற வசனம் விஜயகாந்த் நடித்த ரமணா படத்தில் இடம் பெற்றிருக்கும்.

அந்த வசனத்திற்கு ஏற்ப விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு இன்று தமிழ்நாடே அழுகிறது.

இனி அந்த கம்பீரமான குரலை எப்போது கேட்போம், பாசத்தோடு வித்தியாசம் பார்க்காமல் உதவும் உள்ளம் கொண்ட உன்னை இனி காண முடியாது என மக்கள் புலம்பிய வண்ணம் உள்ளனர்.

அந்த அளவிற்கு ஒரு நல்ல மனிதராக இருந்துள்ளார் விஜயகாந்த்.

நடிகர் சொன்ன விஷயம்
ரமணா படம் நடிக்கும்போது விஜயகாந்த், முருகதாஸிடம் ஒரு கண்டிஷன் வைத்தாராம்.

அதாவது கதையை கேட்கும் முன்னரே விஜயகாந்த், முருகதாஸிடம், இங்க பாருங்க நான் குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கக் கூடாது, கதையில் சாகக்கூடாது என்று கண்டிஷன் வைத்துவிட்டு தான் கதையை கேட்க ஆரம்பித்தாராம்.

பின் கதையை கேட்ட விஜயகாந்த், ஷூட்டிங்கில் ஏ.ஆர்.முருகதாஸின் அர்ப்பணிப்பையும், கடுமையான உழைப்பையும் பார்த்துவிட்டு விஜயகாந்த் ரொம்பவே இம்ப்ரெஸ் ஆகிவிட்டாராம்.

இதனால் தனது கண்டிஷனை தூக்கி போட்டுவிட்டு அப்பாவாகவும், இறப்பது போலவும் நடித்துக் கொடுத்தாராம்.

 

SHARE