கனடிய பிரதமர் விடுமுறைப் பயணத்திற்கு அரச பணத்தை செலவிட்டாரா?

152

 

கனடிய பிரதமர் குடும்பம் விடுமுறையை கழிப்பதற்காக மேற்கொண்ட பயணத்திற்காக அரச பணத்தை செலவிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் இது பற்றிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் ஜமெய்க்காவிற்கு பயணம் செய்திருந்தனர்.

ஜமெய்க்காவில் தங்கியிருப்பதற்கான செலவு செய்யப்படவில்லை எனவும், பிரதமரின் நண்பர் ஒருவரது ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமரது குடும்பத்தினர் விடுமுறைக்காக ஜமெய்க்கா பயணம் செய்ய முன்னதாகவே செலவு விபரங்கள் குறித்து அரச ஒழுக்க விதிகள் சபையிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமரது குடும்பம் ஜெமெய்க்காவில் நண்பர் ஒருவரின் விடுதியில் தங்கியிருப்பதாகவும் இதனால் அதற்கான செலவுகள் எதுவுமில்லை எனவும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, அரசாங்க விமானங்களில் பயணம் செய்வதற்கான பயணக் கட்டணங்கள் அனைத்தும் செலுத்தப்படும் என பிரதமர் குடும்பம் அறிவித்துள்ளது.

SHARE