ஈரானில் மசூதிக்கு அருகில் பயங்கரவாத தாக்குதல்: 103 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

192

 

ஈரானின் – கெர்மானில் உள்ள சாஹேப் அல்-ஜமான் மசூதிக்கு அருகில் நடாத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலில் இதுவரையில் 103 பேர் உயிரிழந்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 141 ஆக உயர்ந்துள்ளது.

ஈரானியப் புரட்சிப்படைத் தளபதியான காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்ட 4ஆம் ஆண்டு நினைவு நாள் அன்று அவரின் கல்லறைக்கு அருகாமையில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

SHARE